Precision Mental Health

PMH Clinic - Your Mental Health Partner

அக்டோபர் 10 - மனச் செம்மை தினம்

எழுத்தாளர் : திருமதி செல்வி இராஜன்,

"உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தமிழால் இணைவோம் ",

உலகத் தமிழ்ப் பேரியக்கம்.

வெளியிடப்பட்ட நாள் : 30 அக்டோபர் 2023.

அனைவருக்கும் மன செம்மைத் தின வாழ்துக்கள். மனசெம்மையே செழுமை தரும். குறைபாடு இல்லாத மனமே அனைத்து வளங்களையும் தரவல்லது. உலக சுகாதார அமைப்பு (WHO) மனத்தின் செம்மை நலத்தின் அளவுகோலை கூறியுள்ளதாவது, "மன நல செம்மை என்பது எவர் ஒருவர் தன்னை உணர்ந்தும், தன் திறமையை உணர்ந்தும், அன்றாட வாழ்வின் பளுவை உணர்ந்தும், பயன் தரும் செயல்களை செய்தும், தனக்கும் சமுதாயத்திற்கும் பங்களிப்பவராக இருப்பவர்" என்கிறது.

மன நலம் பேணுதல் முக்கியம். இதை தடுப்பது எது? நம் வாழ்வின் பழக்க வழக்கங்கள், உண்ணும் உணவு, குடும்ப சூழல், நண்பர்கள், போதைப் பொருளைகளை பயனப்டுத்துதல், நோய் என்று பல காரணிகளை சொல்லிக் கொண்டே போகலாம். மன நலத்தைக் காப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதை இளமையிலேயே பேணுதல் சிறப்பு. இதை பெரியவர்களிடம் பெறுதல் மிகவும் சிறப்பு. ஆனால் இன்று, மன நலத்தை காப்பது என்ற நிலைமை பரவலாக இருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்றே சொல்லலாம். யாருக்காவது அது போன்ற சூழல் இருந்தால், அவர்கள் தகுந்த மன நல ஆலோசகர்களை அணுகுதல் வேண்டும்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற."

என்பது வள்ளுவர் வாக்கு. மனம் என்பது நுண்ணுடல். பருஉடல் அமைவு என்பது மனத்தின் நிலையை பொறுத்தே நிற்பது.எண்ணத்துக்கேற்ற வண்ணம் பருஉடல் (பாடி லாங்குவேஜ்) அமையும். ஆக மனத்தில் குற்றம் இல்லாமல் இருத்தல் வேண்டும். அதுவே நிறைவான அறம். மற்றவை எல்லாம் வெளிப்பகட்டே ஆகும். மனத்தை பற்றிய ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. உலகம் உள்ளவரை அவ்வாராய்ச்சி நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனம் நிலைப்பது,நினைப்பது என்று மட்டும் எவரும் கூறுவர். கலைகளும் கலைகளின் காரியப்பாடுகளும் கருப்பொருள் இடம் மனமே ஆகும். அவை முதலில் மனத்திற்கருக்கொண்ட பின்னரே அறிஞர் வழிப் பருமையில் உரு கொள்ளும். பருமைக்கு மூலமாய் இருப்பது மனம். மனத்தின் எண்ணங்கள் செம்மையானால் நம் ஓசை பாடல் ஆகவும், பரு உடல் நடம் நாட்டியமாகவும், மனம் தியானமாகவும் ஆகும். இதுவே நம் கொண்டாட்டமாகவும் விழாவாகவும் மாறும். மனசெம்மையே ஆகுல நீர பிற.

applestore googleplay